அர்ஜெண்டீனாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 53இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அர்ஜெண்டீனாவில் 53இலட்சத்து 985பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஒன்பதாவது நாடாக விளங்கும் அர்ஜெண்டீனாவில் இதுவரை ஒரு இலட்சத்து 16ஆயிரத்து 184பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 567பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 19பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 17ஆயிரத்து 696பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 621பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 51இலட்சத்து 67ஆயிரத்து 105பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.