வீதிப்போக்குவரத்து தவறுகளுக்கான அபராதங்களை Online மூலமாக செலுத்துவதற்கான தொழில்நுட்ப முறை மற்றும் சட்டம் தயாரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று(செவ்வாய்கிழமை) நடைபெற்றது.
பணம் செலுத்துவதற்கான சட்டம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதற்குத் தேவையான பரிந்துரைகளை போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் தலைமையில் அமைச்சர் சரத் வீரசேகரவின் மேற்பார்வையின் கீழ் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு, பொலிஸ், இலங்கை மத்திய வங்கி, மக்கள் வங்கி, லங்கா CLEAR மற்றும் ICTA ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டது.
இந்த குழு அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு புதிய சட்டம் மற்றும் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
இந்த புதிய வழிமுறையை முதலில் அதிவேக நெடுஞ்சாலைகளில் அமுல்படுத்த வேண்டும் என்றும், பின்னர் ஏனைய வீதிகளிலும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.