தென்னாபிரிக்காவில் இருந்து நெதர்லாந்து சென்ற 13 பேருக்கு, புதிய கொரோனா வைரஸ் திரிபான ஒமிக்ரோன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவில் இருந்து இரண்டு விமானங்களில் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமுக்கு சென்ற 61 பயணிகளில் 13 பேருக்கே ஒமிக்ரோன் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, இத்தாலி மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் புதிய திரிபான ஒமிக்ரோன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது நெதர்லாந்திலும் இந்த பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட கொவிட் தொற்றுகள் மற்றும் புதிய மாறுபாடு குறித்த கவலைகளுக்கு மத்தியில், நெதர்லாந்தில் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவிருக்கும் நிலையில், இந்தப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
விருந்தோம்பல் மற்றும் கலாச்சார அரங்குகள் மற்றும் வீட்டுக் கூட்டங்களுக்கான வரம்புகள் ஆகியவை இதில் அடங்கும்.
தென்னாபிரிக்காவில் இருந்து திரும்பியவர்கள் கொவிட் பரிசோதனை செய்து கொள்ளுமாறு நெதர்லாந்து சுகாதார அமைச்சர் ஹ்யூகோ டி ஜோங்கே அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
‘நெதர்லாந்தில் அதிக தொற்றுகள் இருப்பதை நினைத்துப் பார்க்க முடியாது’ என்று அவர் கூறினார்.