கொரோனாவின் ஒமிக்ரோன் திரிபு நாட்டுக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், இலங்கைவரும் அனைவரையும், விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டுக்கு வருவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைக்கு மேலதிகமாக, நாட்டுக்கு வருகைதந்த பின்னரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.