காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் இருந்த 200 கோப்புகள் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே காணி மறுசீரமைப்பு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் பாரிய ஊழல் மோசடிகள் நடைபெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.