இலங்கையின் உள்ளூர் சந்தைக்கான எரிவாயு விநியோகத்தை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளார்.
லிட்ரோ கேஸ் லங்கா மற்றும் லாஃப்ஸ் கேஸ் பிஎல்சி ஆகிய இரு நிறுவனங்களுக்கும் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை இடைநிறுத்துமாறு நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு கடிதம் எழுதியுள்ளதாக அவர் கூறினார்.
எரிவாயு கசிவை கண்டறியும் மணத்தை உருவாக்கும் இரசாயன பதார்த்தம், உரிய அளவில் இல்லாதமை காரணமாகவே, இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
எரிவாயு கசிவை கண்டறியும் மணத்தை உருவாக்கும் எதில் மெகப்டன் (Ethyl Mercaptan) கொள்கலனில் 14 அலகுகளாக இருக்கவேண்டிய நிலையில், அது தற்போது 5 அலகுகளாக உள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, எதில் மெகப்டனின் மணம் 14ஆக அதிகரிக்கும் வரை விநியோகம் இடைநிறுத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.