முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் மறைவுக்கு பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதன்படி பாகிஸ்தான் இராணு செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பாபர் இப்திகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ராணுவ முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 13 வீரர்கள் அகால மரணம் அடைந்தது அதிர்ச்சி அளிக்கிறது.
அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் இராணுவ கூட்டு கமிட்டியின் தலைவர் நதீம் ராஸா மற்றும் ராணுவ தளபதி ஜெனரல் குவாமர் ஜாவேத் பாஜ்வா இரங்கல் தெரிவித்துள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிகோலெய் குதாசேவ், இந்தியா-ரஷ்யா இடையேயான சிறப்பான உறவுகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய ஒரு நெருங்கிய நண்பரை ரஷியா இழந்துவிட்டது. இந்த சோகமான நிகழ்வில் இந்தியாவுடன் இணைகிறோம்’ என்று கூறியுள்ளார்.
இதைப்போல இஸ்ரேல் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகூ, இராணுவ அமைச்சர் பென்னி காண்ட்ஸ், அவுஸ்ரேலிய தூதரகம், பிரெஞ்சு தூதர், சிங்கப்பூர் தூதரகம், மாலைத்தீவு அதிபர் இப்ராகிம் சொலி, முன்னாள் அதிபர், தைவான் வெளியுறவு அமைச்சகம், பூடான் பிரதமர் என பல நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.