லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) ரி-20 தொடரின் எட்டாவது லீக் போட்டியில், தம்புள்ளை ஜூயண்ட்ஸ் அணி, காலி க்ளேடியேட்டர்ஸ் அணிக்கு 160 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ளை ஜூயண்ட்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை ஜூயண்ட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், விக்கெட்டுகள் இழப்புக்கு ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தசுன் சானக 37 ஓட்டங்களையும் ரமேஸ் மெண்டிஸ் ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
காலி க்ளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சில், நுவான் துசார மற்றும் நூர் அஹமட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சமித் பட்டேல், தனஞ்சய லக்ஷான் மற்றும் மொஹமட் ஹபீஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
தற்போது 160 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, காலி க்ளேடியேட்டர்ஸ் அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.