வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வரும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை அவசியமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் விமான நிலையத்தில் பி.சி.ஆர் சோதனை அறிக்கையை 72 மணிநேரத்திற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளார்.
அத்தோடு விமானம் ஏறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் அன்டிஜென் பரிசோதனை செய்து, அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதேநேரம் பயணிகள் கட்டாயம் ஒன்லைன் சுகாதார நடைமுறை தொடர்பான ஆவணங்களை பூரணப்படுத்தி சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதனை உறுதி செய்யுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் அனைத்து விரைவான அன்டிஜென் சோதனை மற்றும் பி.சி.ஆர். அறிக்கைகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இந்த நடைமுறைகள் அனைத்தும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.