நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யக் கோரி, ஐரோப்பாவில் வாழும் இலங்கையர்கள் குழுவொன்று ஜெனிவாவில் அமைதியான முறையில் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
ஜெனிவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு முன்பாக குறித்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த இலங்கையர்கள் பலர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.