லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் இன்று இடம்பெறவுள்ள போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணியும் லைக்காவின் யவ்னா கிங்ஸ் அணியும் மோதவுள்ளனர்.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் நாளை இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.
லைக்காவின் யவ்னா கிங்ஸ் அணி ஏற்கனவே பிளே ஓப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் அடுத்து இடம்பெறும் போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என திஸ்ஸர பெரேரா தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்றய போட்டியின் போது, யவ்னா கிங்ஸ் அணியில் விஜயகாந்த் வியாஸ்காந்த், தெய்வேந்திரம் டினோஷன் அல்லது ரத்னராஜா தனுரதன் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.