தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான பொது ஆவணம், இன்று புதன்கிழமை இறுதி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய சந்திப்பு, பொது ஆவணத்தில் கைச்சாத்திடுவது தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படாமல் நிறைவடைந்தது.
இந்நிலையில், இறுதி வரைபை தயாரிக்கும் பணியில், சிறிகாந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன், மனோ கணேசன், மாவை சேனாதிராஜா, சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், ஆர்.இராகவன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
இதனை அடுத்து குறித்த உறுப்பினர்கள் அடங்கிய குழு நேற்று மாலை, அந்த பொது ஆவணத்தை உறுதிசெய்துள்ளது.
குறித்த பொது ஆவணத்தின் எழுத்துமூல வடிவம் இன்று முழுமையாக தயாரிக்கப்படவுள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் ஆதவன் செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.
இதனை அடுத்து தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களது கையொப்பத்துடன் புதிய ஆவணம் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.