• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது தமிழ் முற்போக்கு கூட்டணி

 ‘ஜனாதிபதி அரசியல் தீர்வு பேச்சுக்கு அழைப்பு விடுப்பார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்தது’

தமுகூ தலைவர் மனோ கணேசன்!

KP by KP
2022/01/19
in இலங்கை, பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
79 0
A A
0
35
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

“அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்தை நடத்த தான் தயார்” என்ற ஒரு நிலைப்பாட்டை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச இன்று தன் கொள்கை உரையில் அறிவிப்பார் என்று கடந்த சில நாட்களாக ஒருசில ஆங்கில, தமிழ், சிங்கள ஊடகங்களிலும், ஒருசில தமிழ் அரசியல் தரப்புகளாலும் வெளியிடப்பட்ட ஊகங்கள் இன்று பொய்த்தன.

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச அடுத்த மூன்று வருடங்களுக்கான தனது அரசாங்கத்தின் கொள்கை நோக்கை விளக்கி இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய நீண்ட உரையில், தேசிய இனப்பிரச்சினையை, பொருளாதார பிரச்சினையாக மட்டுமே பார்க்கும் தனது கொள்கை மாறவில்லை என்பதை தெளிவாக கோடிட்டு காட்டினார்.

ஜனாதிபதியின் உரை நிறைவு பெற்ற பின், முன்னாள் எதிர்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் எம்பி மிகவும் சலிப்புடனும், ஏமாற்றத்துடனும் இருந்ததை, அவருக்கு சமீபத்தில் அமர்ந்திருந்த நான் அவருடன் சற்று உரையாடிய போது அவதானித்தேன். அது எனக்கு மிகுந்த மனக்கவலையை தந்தது.

“ஜனாதிபதி இனப்பிரச்சினையை பற்றி ஒரு வார்த்தையும் கூறாமல், கடலுக்கு அடியில் அமைக்க திட்டமிடும் டிஜிடல் தொழில்நுட்ப கேபிள்களை பற்றி அதிகம் பேசினார். உங்கள் இனப்பிரச்சினையையும் அங்கே கடலுக்கு அடியில் புதைக்க போகிறாரோ” என அவ்வேளை என்னுடன் உரையாடிய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேலியாக தெரிவித்தார், என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் சிம்மாசன உரையை அடுத்து கருத்து கூறிய  மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

“அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்தை நடத்த தான் தயார்” என்ற ஒரு நிலைப்பாட்டை ஜனாதிபதி இன்று தன் கொள்கை உரையில் அறிவிப்பார் என்று கடந்த சில நாட்களாக வெளியிடப்பட்ட ஊகங்கள் பொய்த்தன. கொழும்பின் ராஜதந்திர சமூகம் தவறாமல் வாசிக்கும் பிரபல வார இறுதி ஆங்கில பத்திரிக்கையின் அரசியல் ஆரூடம் பொய்த்தது.

அப்பத்திரிக்கை தனது ஏற்புடைமையை இழந்தது என்றும், அதை நம்பிய ஒருசில தமிழ் அரசியல்வாதிகளும் ஏமாந்தனர் என்றும், சற்று முன் என்னுடன் உரையாடிய பிரபல மேற்கு நாட்டு ராஜதந்திரி சொன்னார்.

“தேசிய இனப்பிரச்சினை” இருப்பதாக ஏற்க ஜனாதிபதி தன் உரையில் தெளிவாக மறுக்கிறார். இந்நாட்டில் நிலவும் பிரச்சினைகளை “பொருளாதார” பிரச்சினையாக மட்டுமே அவர் இருக்கமாக பார்க்கிறார். மக்களுக்கு குடிநீர், நீர்பாசனம், வீடுகள், நெடுஞ்சாலைகள் ஆகிய வசதிகளை வழங்குவதே, நல்லிணக்கத்துக்கு அடிப்படை என்பதுவே தனது அரசாங்கத்தின் நல்லிணக்க கொள்கை  என ஜனாதிபதி கூறி முடித்தார்.

மலையக தமிழர்கள், முஸ்லிம் ஆகிய இலங்கையின் சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் விசேட பிரச்சினைகள் பற்றிய தீர்வுகள் தொடர்பிலும் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவின் அடுத்த மூன்றாண்டுக்கான கொள்கை உரையில் எதுவும் கூறப்படவில்லை.

அதிகார பரவலாக்கல், 13ம் திருத்தம் ஆகிய விவகாரங்கள் பற்றி ஜனாதிபதி ஒரு வார்த்தையும் கூறாமல் இந்நாட்டு தமிழ் பேசும் மக்களை ஏமாற்றி உள்ளார் என நான் நினைக்கிறேன்.  வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தனது அரசினால் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு வடகிழக்கு பிரதேசங்களில் இருந்து  மக்களால் தெரிவு செய்யப்பட்ட  எம்பீக்கள் “ஒத்துழைப்பு” வழங்க வேண்டும் என்பதுவே அவரது அதிகபட்ச கோரிக்கையாக இருந்தது.

ஜனாதிபதியின் உரை நிறைவு பெற்ற பின், முன்னாள் எதிர்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் எம்பி மிகவும் சலிப்புடனும், ஏமாற்றத்துடனும் இருந்ததை, அவருக்கு சமீபத்தில் அமர்ந்திருந்த நான் அவருடன் சற்று உரையாடிய போது அவதானித்தேன். அது எனக்கு மிகுந்த மனக்கவலையை தந்தது.

“ஜனாதிபதி இனப்பிரச்சினையை பற்றி ஒரு வார்த்தையும் கூறாமல், கடலுக்கு அடியில் அமைக்க திட்டமிடும் டிஜிடல் தொழில்நுட்ப கேபிள்களை பற்றி அதிகம் பேசினார். உங்கள் இனப்பிரச்சினையையும் அங்கே கடலுக்கு அடியில் புதைக்க போகிறாரோ” என அவ்வேளை என்னுடன் உரையாடிய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேலியாக தெரிவித்தார்.

அதேவேளை தான் நியமித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத குழுவினால் எழுதப்படும் புதிய அரசியலமைப்பிற்கான வரைபை தனது அமைச்சரவையில் சமர்பித்து, அதன்பின் பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச கூறினார். இந்த புதிய  அரசியலமைப்பு வரைபில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பது கானல் நீராகவே இருக்கும் என்பதை ஜனாதிபதியின் உரை கோடிட்டு காட்டுவதாகவே நான் நினைக்கிறன். ” என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Mano Ganeshan
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

‘எண்ணெய் தாங்கிகள் மீண்டும் நாட்டிற்கு’ – ஆளும் தரப்பிற்கு தெளிவுபடுத்தினார் உதய கம்மன்பில!

Next Post

கொள்கைப் பிரகடனம் மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று !

Related Posts

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!
இலங்கை

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

2026-06-16
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

2026-06-16
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-06-16
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!
இலங்கை

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

2026-06-16
ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி கொழும்பில் அமைதியாக ஆர்ப்பாட்டம்!
இலங்கை

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி கொழும்பில் அமைதியாக ஆர்ப்பாட்டம்!

2026-06-16
கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் CIDயின் முயற்சிக்கு சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம்!
இலங்கை

கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் CIDயின் முயற்சிக்கு சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம்!

2026-06-16
Next Post
பசுமை விவசாயத்திற்கான அரசாங்கத்தின் கொள்கையில் ஒருபோதும் மாற்றம் ஏற்படாது – கோட்டா

கொள்கைப் பிரகடனம் மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று !

பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களுக்கு அல்கொய்தாவுடன் தொடர்பு – இந்தியா குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களுக்கு அல்கொய்தாவுடன் தொடர்பு - இந்தியா குற்றச்சாட்டு!

எல்லையில் அமைதி நிலவினால் தான் உறவு மேம்படும் – ஜெய்சங்கர்

அபுதாபி தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு உதவி வழங்க நடவடிக்கை - ஜெய்சங்கர்

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

0
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

0
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

0
ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.