இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்று சமூக பரவலாக மாறியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் இன்சாகாக் எனப்படும் மரபணு வரிசை முறை கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மெட்ரோ எனப்படும் பெரு நகரங்களிலும் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து இன்சாகாக் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் ஒமிக்ரோன் வைரஸ் சமூக பரவலாக மாறியுள்ளது. அனைத்து மெட்ரோ நகரங்களிலும் அது வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகிரித்து வருகிறது.
ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலானோருக்கு எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. பலருக்கு சிறிய அறிகுறிகள் மட்டுமே உள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.