உலகம் முழுவதும் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களாக இந்தியர்கள் இருப்பதில் நாடே பெருமை கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
”பிரதம மந்திரி பால சக்தி புரஸ்கார்” விருதுகள் விழாவில் காணொலி வாயிலாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “நாட்டுக்கு உழைப்பதே முதன்மையானது எனக் கருதிய நேதாஜி சுபாஷ்சந்திரபோஸின் இலக்கை நோக்கி இளைஞர்கள் செயலாற்ற வேண்டும்.
இன்று உலகம் முழுவதும் உள்ள பல பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களாக இந்தியர்கள் இருப்பதில் நாடே பெருமை கொள்கிறது.
இந்தியாவில் உள்ள சிறுவர், சிறுமியர் தங்களை சுற்றியுள்ள மக்களிடம் உள்ளூர் தயாரிப்புகளை பயன்படுத்துவதற்கு ஊக்கமளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.