திருப்பதி கோயிலில் கொரோனா கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்பட்டு, வழக்கம்போல் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான திருமலை திருப்பதி தேவஸ்தான ஆலோசனைக் குழுவின் தலைவர் ஏ.ஜெ.சேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி திருப்பதி தேவஸ்தானத்தின் உள்ளூர் ஆலோசனை குழுவினர் பதவியேற்றுக் கொண்டார்கள்.
இதில் ஏ.ஜெ.சேகர் தலைவராகவும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், துணைத் தலைவராகவும் பதவியேற்று கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.ஜெ.சேகர், “சென்னையில் இடம் கிடைத்தால் 100 கோடி ரூபாய் செலவில்கூட வெங்கடேச பெருமாள் கோயில் அமைக்கப்படும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.