உக்ரைனின் எல்லை நாடான துருக்கி, ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அதேவேளை மேற்குல நாடுகள், ரஷ்யா மீது தடைகளை விதித்துள்ளமைக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தற்போதைக்கு உக்ரைனுக்கு துருப்புகளை அனுப்பும் எண்ணம் இல்லை எனவும், அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் துருப்புகளை அனுப்பப்போவதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
அதேபோன்று ரஷ்யாவின் நடவடிக்கைகள் நியாயமற்றவை என ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
நாங்கள் எமது தாய் நாட்டிற்காக போராடி வருகிறோம் என களத்திலுள்ள ரஷ்ய சார்பு பிரிவினைவாத போராளி ஒருவர் தெரிவித்துள்ளார்.