இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளிக்கும் நிகழ்வு, இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
ஐக்கிய அரபு இராச்சியம், அமெரிக்கா மற்றும் லிபியா ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்களே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.
- இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் – காலித் நசார் சுலைமான் அல்அமெரி (Khaled Nasser Sulaiman Al Ameri)
- இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜியோன் சுங் (Julie Jiyoon Chung)
- இலங்கைக்கான லிபியாவின் தூதுவர் நாசர் அல்ஃபுர்ஜானி (Nasser Alfurjani)
பிராந்திய ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் மற்றும் பிரதான கூட்டமைப்பு அதிகாரி செனரத் திஸாநாயக்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.