நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களில் அதிகமானவை, மின்சாரம் துண்டிக்கப்பட்டபோது இடம்பெற்றவை என்பது கண்டறிப்பட்டுள்ளது என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மின்சாரம் துண்டிக்கப்படும்போது பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கெமராக்கள் செயலிழப்பதும் திருட்டு அதிகரிக்க காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை ஹொரேதுடுவ பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் சில தினங்களுக்கு முன்னர் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
விகாராதிபதியின் அலுவலக அறையிலள்ள தங்க தாயத்து மற்றும் பெறுமதிமிக்க பொருட்கள் திருடர்களால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விஹாரையில் சிசிடிவி கெமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் அச்சந்தர்ப்பத்தில் மின்வெட்டு அமுலில் இருந்ததால் கெமராக்கள் செயலிழந்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.