ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான நான்காவது சுற்று பேச்சுவார்த்தை இன்று காலை உள்ளூர் நேரப்படி 10:30 மணிக்கு தொடங்க உள்ளதாக உக்ரைனின் உட்துறை அமைச்சரின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோ தெரிவித்துள்ளார்.
உக்ரைனிய பேச்சுவார்த்தையாளர் மைக்கைலோ போடோலியாக் வார இறுதி பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமானவை என்று கூறியதையடுத்து, இராஜதந்திர முன்னேற்றம் பற்றிய நம்பிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன.
ரஷ்யா ஏற்கனவே ஆக்கப்பூர்வமாக பேசத் தொடங்கியுள்ளது என்றும் சில நாட்களில் சில முடிவுகளை நாம் அடைவோம் என்று நான் நினைக்கிறேன் என்றும் முன்னதாக, பொடோலியாக் கூறியிருந்தார்.
பெய்ஜிங் ரஷ்யாவிற்கு உதவிகளை அனுப்பும் சாத்தியக்கூறுகள் குறித்து கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே தனித்தனியான பேச்சுவார்த்தைகள் இன்று நடைபெறும்.
ரஷ்யா- உக்ரைனுக்கு இடையேயான நான்காவது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை இன்று!
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நான்காவது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.
ரஷ்யாவின் பேச்சுவார்த்தையாளரும், ஜனாதிபதி புடினின் செய்தித் தொடர்பாளருமான டிமிட்ரி பெஸ்கோவ், காணொளி அழைப்பு மூலம் பேச்சுவார்த்தை நடைபெறும் என உறுதிப்படுத்தினார்.
உக்ரைனின் பேச்சுவார்த்தையாளரும், ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியின் ஆலோசகருமான மைகைலோ பொடோலியாக் ரஷ்யாவின் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
மைகைலோ பொடோலியாக் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட காணொளியில், ‘ரஷ்யா ஆக்கப்பூர்வமாக ஈடுபடத் தொடங்கியுள்ளது. ரஷ்யா இப்போது தன்னைச் சுற்றி நடப்பதை போதுமான அளவு உணரத் தொடங்கியுள்ளது.
ரஷ்யா, உக்ரைனின் நிலைப்பாட்டையும் உணர்ந்துள்ளது. இது உக்ரைன், போர்க்களங்களில், மற்றும் நாட்டின் நலன்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.