காசல்ரீ நீர் தேக்கத்தின் பாதுகாப்பு பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 8 பேரை அட்டன் விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு கைது செய்துள்ளனர்
அட்டன் விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரேமலால் தலைமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த 8 பேரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு சில உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கின்றனர் .
கைது செய்யபட்ட 8 பேரும் மஸ்கெலியா, நோர்வூட், பொகவந்தலாவ, அட்டன் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் 8 பேரையும் இன்றைய தினம் ( சனிக்கிழமை) அட்டன் நீதவான் முன்னிலையில் அஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர் .