மிரிஹானவில் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து கருத்து வெளியிட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாயிருந்தன.
இதற்கு பொறுப்பு கூறும் முகமாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த போராட்டத்தின் போது பொலிஸாரால் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர், பொலிஸாரின் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களினால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எவ்வாறாயினும் கைது செய்யப்பட்டு களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் உயிருடன் இருப்பதாகவும், ஆர்ப்பாட்டக்காரர் எவரும் உயிரிழக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுபோன்ற போலியான தகவல்கள் குறித்து மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.