ஆளும் தரப்பின் முக்கியஸ்தர்களான ரொஷான் ரணசிங்க, கெஹெலிய, காமினி லொக்குகேவின் வீடுகளை முற்றுகையிட்டவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய பிலியந்தலையிலுள்ள முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் வீட்டுக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இன்று முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் வீட்டுக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரது வீட்டின் ஒரு பகுதிக்கு தீ வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டுக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது அதிகளவான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
அதேபோன்று பொலன்னறுவையில் அமைந்துள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் வீட்டுக்கு முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, அதிகளவான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ரொஷான் ரணசிங்கவின் வீட்டிற்குள் நுழைந்த சிலர் அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தியதாக குறிப்பிடப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது சில ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோன்று தற்போது ஜனாதிபதியின் செயலகம் மற்றும் அலரி மாளிகை என்பவற்றினை முற்றுகையிட்டுள்ள போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.