தமிழ் – சிங்கள புத்தாண்டு இன்று(வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.
வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் சுபகிருது புத்தாண்டு இன்று காலை 7.50 இற்கு பிறந்துள்ளது.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, சுபகிருது புத்தாண்டு இன்று காலை 8.41 இற்கு பிறந்தது.
இன்று அதிகாலை 4.41 முதல் பிற்பகல் 12.41 வரையான காலப்பகுதி மருத்து நீர் வைக்க உகந்த நேரமாகும்.
கைவிஷேடம் பரிமாறுவதற்கு வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று காலை 7.57 முதல் 8.47 வரையும், நாளை (15) காலை 7.52 முதல் 9.51 வரையும், திருக்கணித பஞ்சாங்கப்படி இன்று(14) காலை 8.50 முதல் 9.42 வரையும், நாளை காலை 8.35 முதல் 9.50 வரையும் சுபநேரம் காணப்படுகிறது.
ஆதவன் தொலைக்காட்சி மற்றும் ஆதவன் இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் – சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.