எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக அரச உத்தியோகத்தர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன சூரியராச்சி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
மேலதிக கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளாத அரச உத்தியோகத்தர்கள் இந்த நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமைக்கு விரைவான தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.