ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அறிக்கை இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
இதேவேளை, போராட்டங்களின்போது தனிநபர்களின் உரிமைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பாக பொலிஸாருக்கு புதிய பரிந்துரைகளை வழங்க மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவொன்று பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.