ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் 20ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கு ஆதரவை வழங்குகின்ற போதிலும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டார்.