கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் தனிமனித நடைபவனி போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தலவாக்கலை நகரில் இருந்து சசிகுமார் என்ற தனி மனிதர் ஒருவரே இவ்வாறு நடை பவனியாக தனது போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
தலவாக்கலை நகர மத்தியில் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு ஆரம்பித்த இந்த போராட்டத்தில் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் மற்றும் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தற்போதைய உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு உறுப்பினருமான தாளமுத்து சுதாகரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
நடைபவனியாக சென்ற அவரை நகர வர்த்தகர்கள் சார்பில் வர்த்தக சங்க தலைவர் புஷ்பா விஷ்வநாதன் கொட்டகலை நகரில் வரவேற்பு செய்தார். அவருடன் நகர மக்களும் உடனிருந்தனர். மாலை அணிவித்துஇ ஆசி வழங்கி அவரின் போராட்டம் வெற்றிப்பெற வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.