நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று(புதன்கிழமை) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபன தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சாந்த சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக பாதுகாப்பு கருதி கடந்த திங்கட்கிழமை முதல் எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.