பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 10 சுயாதீன கட்சிகளுக்கு, கலந்துரையாடலுக்காக அழைப்பு விடுத்துள்ளார்.
எனினும், கலந்துரையாடல் தொடர்பில் தமது கட்சி தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் அறிவிப்பதாக அந்த கட்சிகள் பதிலளித்துள்ளன.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையிலேயே தற்போது குறித்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதேவேளை, அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தீர்மானித்துள்ளார்.
இந்தநிலையில் அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.