18 பேர் கொண்ட புதிய அமைச்சரவைக்கான எஞ்சிய நியமனங்கள் எதிர்வரும் 18ஆம் திகதிக்கு பின்னர் வழங்கப்படக் கூடும் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுகாதாரம், விவசாயம் மற்றும் கல்வி ஆகிய துறைகளுக்கு ஏற்கனவே மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய புதிய கல்வி அமைச்சராக கலாநிதி சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன், விவசாய அமைச்சராக அனுர பிரியதர்ஷன யாப்பாவும், சுகாதார அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வாவும் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி அமைச்சுப் பதவியை ஏற்கத் தயக்கம் காட்டுவதால், அந்த அமைச்சை பிரதமரின் கீழ் வைத்துக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர் அமைச்சுப் பதவியை பெற விரும்பினால், அவருக்கு மீண்டும் நிதியமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.