வடகிழக்கு பிலிப்பைன்ஸ் மாகாணத்தை நெருங்கும் போது 130க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற படகு தீப்பிடித்ததில், குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர்,
இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில், பெரும்பாலான பயணிகள் மற்றும் பணியாளர்கள் மீட்கப்பட்டதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
பொலிலோ தீவில் இருந்து கியூசான் மாகாணத்தில் உள்ள ரியல் நகரத்தில் உள்ள துறைமுகத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது, M/V Mercraft- 2 எனும் படகில் தீ பரவியது.
இதன்போது, கேப்டன் உட்பட 23 பேர் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்
இதில் 134 பயணிகள் மற்றும் பணியாளர்களில் பலர் தண்ணீரில் குதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மற்றவர்கள் அப்பகுதியில் உள்ள கப்பல்கள் மூலம் மீட்கப்பட்டனர். காணாமல் போனவர்களைத் தேடுவதற்கு ஹெலிகொப்டர்கள் மூலம் கடலோர காவல்படை பணிகளை தொடர்ந்து.
என்ஜின் அறையில் இருந்து தீ பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, இடிபாடுகள் ரியல் கரைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கடலோர காவல்படை வெளியிட்ட படங்களில் படகில் தீ பரவியதையும், அதிலிருந்து இருண்ட புகை வெளியேறுவதையும் காட்டுகிறது.
பிலிப்பைன்ஸ் தீவுக்கூட்டத்தில் அடிக்கடி ஏற்படும் புயல்கள், மோசமாகப் பராமரிக்கப்படும் படகுகள், நெரிசல் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன.
அங்கு கடல் விபத்துகள் பொதுவானவை. டிசம்பர் 1987இல், டோனா பாஸ் என்ற படகு எரிபொருள் டேங்கருடன் மோதியதில் மூழ்கியது. உலகின் மிக மோசமான அமைதிக்கால கடல்சார் பேரழிவில் 4,300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.