சந்தையில் மரக்கறிகளின் விலை கணிசமாக உயர்வடைந்துள்ளது.
ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
வருடத்தின் ஏனைய மாதங்களுடன் ஒப்பிடும் போது மரக்கறி விலைகள் பொதுவாக மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அதிகமாக காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இம்முறை விலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தட்டுப்பாடு காரணமாக உற்பத்தியில் ஏற்பட்ட தொடர் வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக போக்குவரத்து செலவுகள் அதிகரித்தமையினால் மரக்கறிகளின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய மலையகத்தில் விளையும் மரக்கறிகளான பீன்ஸ் கிலோ ஒன்று 700 ரூபாவிலிருந்து 760 ரூபாவாகவும், பீட்ரூட் 400 லிருந்து 460 ரூபாவாகவும், தக்காளி 700 லிருந்து 800 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
கத்தரிக்காய், பச்சை மிளகாய் உள்ளிட்ட பல மரக்கறிகளின் சில்லறை விலையும் அதிகரித்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோ மரக்கறிகள் 300 முதல் 450 ரூபாய் வரையிலும், பலாப்பழம் ஒரு கிலோ 150 ரூபாவிற்கும், விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.