முஸ்லிம்கள் இந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்காவுக்குச் செல்லாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
தேசிய ஹஜ் குழு, ஹஜ் சுற்றுலா அமைப்பு மற்றும் முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டு 1,585 இலங்கையர்களுக்கு ஹஜ் யாத்திரையில் பங்குக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
எனினும் டொலர்கள் தட்டுப்பாடு காரணமாக இம்முறை ஹஜ் பயணத்தில் கலந்துகொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.