ஜேர்மனியில் குரங்கு அம்மை தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை பொதுமக்களுக்குச் செலுத்துவதற்கு சுகாதார நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
எனினும், அத்தகைய தடுப்பூசிகளின் இருப்பு மிகவும் குறைவாக இருப்பதால், குரங்கு அம்மை தொற்று அபாயம் நிறைந்தவர்களுக்கு மட்டும் அந்தத் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்று நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
பாலியல் ரீதியில் புதியவர்களுடன் நெருங்கிப் பழகுவோருக்கு அந்த நோய்த்தொற்று அபாயம் அதிகமிருப்பதாகவும், இதுவரை அந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அந்த வகையைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.
ஜேர்மனியில் 130க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 8ஆம் திகதி நிலவரப்படி உலகமெங்கும் சுமார் 1,000 பேருக்கு இந்த நோய் தாக்கி இருப்பதை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்தது.
இதனிடையே பிரேஸில் மற்றும் கிரேக்கத்தில் குரங்கு அம்மை தொற்று பரவியுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.