ஒவ்வொரு சிகரெட்டிலும் புகைப்பிடிப்பதன் தீங்கு குறித்த அபாய எச்சரிக்கையை அச்சிடுவதைக் கட்டாயமாக்க கனேடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
சிகரெட் பெட்டிகள் மீது புகைப்பதால் உடல்நிலத்துக்கு ஏற்படும் அபாயம் குறித்த எச்சரிக்கையை அச்சிடுவது 20 ஆண்டுகளுக்கு கனடாவில் கட்டாயமாக்கபட்ட போதும், தற்போது உலகிலேயே முதல்முறையாக இவ்வாறானதொரு நடவடிக்கையை கனடா எடுத்துள்ளது.
இது குறித்து மனநலத் துறை அமைச்சர் கரோலின் பெனட் கூறுகையில், ‘சிகரெட் பெட்டிகள் மீது அபாய எச்சரிக்கை பொறிக்கப்படுவதால் ஏற்படக்கூடிய தாக்கம் இத்தனை ஆண்டுகளில் மறைந்துபோயிருப்பதற்கான வாய்ப்புள்ளது. இந்தச் சூழலில், ஒவ்வொரு சிகரெட்டிலும் அபாய எச்சரிக்கை இருந்தால், அந்தத் தகவல் இன்னும் அதிக அளவில் மக்களை சென்று சேரும் என கூறினார்.
உலகிலேயே முதல்முறையாக அறிமுகப்படுத்தவிருக்கும் இந்த திட்டம், அடுத்த ஆண்டின் மத்தியிலிருந்து அமுலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.