சர்வதேச கிரிக்கெட்போட்டிகளில் இருந்து ஒய்வு பெறவுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் இயோன் மோர்கன் அறிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் தலைமைப்பொறுப்பினை ஏற்ற அவரின் தலைமைத்துவத்தின் கீழ் இங்கிலாந்து அணி 2019ஆம் ஆண்டு முதலாவது உலக கிண்ணத்தினை சுவீகரித்துக் கொண்டது.
எனினும் இந்த வருடத்தில் தொடர்ச்சியாக அவருக்கு ஏற்பட்ட வலது கால் தசைப்பிடிப்பு காரணமாக பெரும் சிரமத்தை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையிலேயே சர்வதேச கிரிக்கெட்போட்டிகளில் இருந்து ஒய்வு பெறும் தீர்மானத்தினை அவர் எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.