விம்பிள்டன் டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச், நெதர்லாந்தின் டிம் வான் ரிஜ்தோவனுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இப்போட்டியில், சிறப்பாக விளையாடிய நோவக் ஜோகோவிச், 6-2, 4-6, 6-1, 6-2 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்குள் நுழைந்த நோவக் ஜோகோவிச், நாளை நடைபெறும் போட்டியில் இத்தாலியின் ஜன்னிக் சின்னரை எதிர்கொள்ளவுள்ளார்.