பாண் ஒன்றின் விலை, இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பாண் ஒன்றின் புதிய விலை 190 ரூபாயாக அதிகரித்துள்ளது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஏனைய வெதுப்பக பொருட்களின் விலைகளும் 10 ரூபாயினால் அதிகரிக்கப்படும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.