ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்தை மீறிய கட்சியின் உப தலைவர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவர் தொடர்பிலும் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டும் என மத்திய குழு எடுத்த தீர்மானம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
நிமல் சிறிபால டி சில்வா இது தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்துள்ளமை காரணமாக குறித்த தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
எனினும் தற்போது குறித்த நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக விவசாய அமைச்சர் பதவியை மஹிந்த அமரவீரவும், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வாவும் பொறுப்பேற்றனர்.
ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து அமைச்சர் ஒருவர் இலஞ்சம் பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நிமல் சிறிபால டி சில்வா, அது தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ள போதிலும், அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.