அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டிகளில், அல்கராஸ் கார்பிஃயா மற்றும் இகா ஸ்விடெக் ஆகியோர் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், ஸ்பெயினின் அல்கராஸ் கார்பிஃயா, இத்தாலியின் ஜென்னிக் சின்னரை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், அல்கராஸ் கார்பிஃயா, 6-3, 6-7, 6-7, 7-5, 6-3 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், போலந்தின் இகா ஸ்விடெக், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவுடன் மோதினார்.
இப்போட்டியில், இகா ஸ்விடெக், 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.