ஒக்டோபர் 28ஆம் திகதி முதல் நாளொன்றுக்கு 08 முதல் 10 மணிநேரம் வரை மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் இணைந்துகொண்டபோதே ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், “எங்களிடம் 28ம் திகதி வரை நிலக்கரி கையிருப்பு உள்ளது. பிரச்சினை என்னவென்றால், 28ம் திகதிக்கு பின்னர் நிலக்கரி தீர்ந்துவிட்டால் 3 மின் உற்பத்தி நிலையங்களையும் மூட வேண்டும்.
சுமார் 820 மெகாவொட் இழப்பு ஏற்படும். இன்றோ நாளையோ நமக்குத் தேவையான நிலக்கரியை முன்பதிவு செய்யாவிட்டால், நாளொன்றுக்கு 08 முதல் 10 மணிநேரம் வரை மின்சாரம் தடைப்படும். 5 நாட்களுக்கு ஒருமுறை நிலக்கரி கப்பல் வர வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.