“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 75ம் நாள் போராட்டம் திருகோணமலை மாவட்டத்தின் முள்ளிப்பொத்தானையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.
இதன் போது இளைஞர்கள், பொது மக்கள்,சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் இணைந்து எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் குறித்த போராட்டம் வடக்கு – கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் 100 நாட்கள் வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.