உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு எதிரான கூட்டு அறிக்கையில் எதிர்க்கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் இந்த கூட்டறிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த கூட்டு அறிக்கையில் 57 பேர் கையெழுத்திட்டுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அதில் கையெழுத்திட்டுள்ளார்.