இலங்கையில் நிரந்தர அமைதி, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கு இடையேயான பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமத்திற்கு புனித திருத்தல தரிசன யாத்திரை ஆரம்பமாகியுள்ளது.
நேற்று (சனிக்கிழமை) நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டு விசேட பூஜை வழிபாடுகளுடன் யாத்திரை ஆரம்பமானது.
ஐப்பசி மாத திருக்கார்த்திகையை முன்னிட்டு ஆரம்பமாகியுள்ள இந்த யாத்திரை மூன்று தினங்களாக நடைபெறவுள்ளது.
அதன்படி கைதடிப் பிள்ளையார் ஆலயம், முறிகண்டிப் பிள்ளையார் ஆலயம், தொடர்ந்து வவுனியா வேப்பங்குளம் பத்திரகாளி அம்மன் ஆலயம், தொடர்ந்து திருகோணமலை தென்கயிலை ஆதீனம், கன்னியாச் சிவன் ஆலயம், திருகோணமலை பத்திரகாளி அம்மன் ஆலயம், திருக்கோணேஸ்வரம் சிவன் ஆலயம் தொடர்து மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இரவு வேளை தங்கி தொடர்ந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம், மண்டூர் முருகன் ஆலயம் உட்பட பல ஆலய தரிசனங்களுடன் கதிர்காமக் கந்தன் ஆலயம் சென்று அங்கு பூசை வழிபாடுகளில் கலந்து கொள்வதுடன் மீண்டும் யாழ் திரும்புவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.