மன்னர் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வைத்தியசாலை பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று (சனிக்கிழமை) காலை விஜயம் செய்துள்ளார்.
இதன்போது வைத்தியசாலை மற்றும் வைத்தியர்கள் எதிர் கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.