அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அல் ஹாமியா அரபுக்கல்லூரியின் 6ஆவது பட்டமளிப்பு விழா அரபுக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இன்று (சனிக்கிழமை) பழைய மாணவர் சங்கம் ஏற்பாட்டில் அரபுக்கல்லூரி வளாகத்தில் கல்லூரி அதிபர் ஏ.சி தஸ்தீக் மதனி தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
இவ்விழாவில் பேராதனை பல்கலைக்கழக அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பிரிவு பேராசிரியர் கலாநிதி எம்.எஸ்.எம் சலீம் பிரதம அதிதியாகவும் கௌரவ விருந்தினராக கல்லூரியின் ஆளுநர் சபைத் தலைவர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த பட்டமளிப்பு விழாவில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்றதுடன் விழாக்குழுத் தலைவரும் முன்னாள் கல்முனை பிரதேச சபை உறுப்பினரும் ஓய்வு பெற்ற அதிபருமான அப்துல் கபூரின் நன்றி உரை நிகழ்த்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.