தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட மானிப்பாய் பிரதேசபை வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) மானிப்பாய் பிரதேச சபையின் தலைவர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சபையில் சமர்ப்பித்தார்.
இதன்போது வரவு செலவுத் திட்டம் மீது விவாதம் நடைபெற்றது, பின்னர் வாக்களிப்புக்கு விடப்பட்டது.
இதேவேளை 28 உறுப்பினர்களை கொண்ட மானிப்பாய் பிரதேச சபையில் இன்று 23 உறுப்பினர்கள் மாத்திரம் வருகை தந்திருந்தனர்.
இதன்படி வரவு செலவு திட்டத்தை 23 உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு நிறைவேற்றப்பட்டது.