குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மைக்கு மேல் அதிக இடங்களில் வென்று தொடர்ந்து 7ஆவது முறையாக பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், பாஜக 156 இடங்களில் வெற்றியைப் பதிவு செய்தது.
கட்லோடியா தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் பூபேந்திர படேல், ஒரு லட்சத்து 92 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
காங்கிரஸ் 17 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
சுயேட்சைகள் 04பேர் வெற்றிபெற்றுள்ளனர். குஜராத்தில் வரும் 12ஆம் திகதியன்று பதவி ஏற்பு விழா நடைபெறும் என்றும் பூபேந்திர படேல் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பார் என்றும் அம்மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் அறிவித்துள்ளார்.
இதனிடையே, குஜராத்தில் வரலாறு காணாத பாஜகவின் மகத்தான வெற்றிக்கு வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
அம்ரித் கால் என்ற திட்டத்தின் கீழ் அடுத்த 25 ஆண்டுகள் வளர்ச்சிக்கு இந்தியா முன்னேறி வரும் நிலையில் குஜராத்தில் கிடைத்துள்ள மகத்தான வெற்றி உற்சாகம் அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.