சட்டரீதியாக முப்படைகளை விட்டு வெளியேறுவதற்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புக் காலத்தில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் சேவையிலிருந்து வெளியேற விண்ணப்பித்துள்ளனர்.
இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இதுவரை 15 ஆயிரத்து 891 படையினர், சட்டரீதியாக முப்படையிலிருந்து விடுபட விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களில் 32 பேர் அதிகாரிகள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்களில் 15 ஆயிரத்து 616 பேர் சேவையில் இருந்து விலகுவதற்கு தேவையான நடவடிக்கைகளை பூர்த்தி செய்துள்ளனர்.